கண்டதும் காதல்,
காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம்
கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தாலும்,
அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும்.
இந்த
உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப
நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள்
என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க!
* நீங்கள்
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த
மாதிரியான காஸ்ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும்
குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க்
ஷேட்ஸ் இருக்குற மாதிரியான உடைகள் எல்லாருடைய உடல் நிறத்திற்கும்
பொருந்தும்.
* நிகழ்ச்சி
நடக்குற இடத்துக்கு போனதும், எங்கையாவது, ஓரமா இடம் இருக்குதான்னு தேடி
பார்த்து போய் உட்காராமல், அந்த நிகழ்ச்சி நடக்கிற இடத்தோட நடுவுல போய்,
உங்களுக்கு அறிமுகமானவங்க கிட்ட சகஜமா சிரிச்சு பேசுங்க.
* பேசும்
போது, உங்க எதிர்பக்கம் நின்னுகிட்டு பேசுறவங்களுடைய கண்களை நேரா பார்த்து
பேசுங்க. அப்படி பேசும் போது, உங்களுடைய உடல்மொழி (க்ஷடினல
டுயபேரயபந)-யும், கவனத்துல வைச்சுக்கங்க.
*சுவர்
மேலே சாய்ந்துக்கிட்டு பேசுறது, டேபிள் மேலே உட்காருவது, பேசும் போது
வாயில ஏதாவது போட்டு மென்னுகிட்டே இருக்கிறது, நகம் கடிக்கறது, இந்த
மாதிரியான செய்கைகள் உங்க கிட்ட இருக்கும் போது நீங்கள் ஆண்களை கவர
முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு.
*அதே சமயத்துல உங்களுக்கு அறிமுகமாகிற நண்பர்கள் கிட்ட உங்களைப் பற்றியே ரொம்ப பெருமையான பேசிக்கறதும், சரியான அணுகுமுறை இல்லைங்க.
* அந்த
நிகழ்ச்சியில உங்களுக்கு புதுசா, அறிமுகமாகிற ஆண் நண்பர்கள் கிட்ட,
உங்களுடைய பழைய காதல் வாழ்க்கையை பத்தியோ அல்லது காதலரைப் பத்தியோ
பேசாதீங்க. இது தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம். ரெண்டு
பேரும் ஒவ்வொருத்தரை பத்தி, நல்லா பேசி, மனசு அளவுல புரிஞ்சுக்கீட்டீங்க
என்ற சூழ்நிலை வரும்போது நீங்க அவர் கிட்ட இந்த விஷயங்களை
பகிர்ந்துக்கலாம்.
* நீங்க
ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போதோ, உங்க
மனசுக்கு பிடிச்ச நபரை நீங்க சந்திக்க நேரிட்டால், இந்த விஷயங்களை
மறக்காம, பின்பற்ற, பழக்கப்படுத்திக்கங்க.
அப்புறம் வேற என்ன? உங்களுடைய நேரங்களை, இனிமையான முறையில் உங்க மனசுக்கு பிடிச்ச அவர் அடைய செலவு பண்ணுங்க.. |