Tamil - இந்த வார ராசிபலன்
இணையத் தமிழ் உலகம் ஞாயிறு, 2010-03-21, 1:18 Am

Logged in as விருந்தினர் RSS
Main | இந்த வார ராசிபலன் | Registration | Login
சேவைகள்

CATEGORIES
Software [6]
Wallpapers [3]
Photoshop [2]
Games [3]
செய்திகள் [16]

கணினி

கவிதைகள்

பெண்கள் உலகம்

சிறுவர் பூங்கா

உடல்நலம்

தமிழ் சினிமா

ஆன்மீகம்

நிழல்ப் படங்கள்
தமிழ் கவிதை
வானவில்
காதல்
நட்பு
மெகந்தி
கோலம்
சிறுவர்
உறுப்பினர் படங்கள்
நடிகைகள்

நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்

இந்த வார ராசிபலன் (115.02.2010 முதல் 22.02.2010 வரை)

எதார்த்தமாகப் பேசி அனைவரையும் வசீகரிக்கும் நீங்கள், வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்றே பேசி முடிப்பீர்கள். உங்கள் லாப வீட்டில் குரு, சூரியன், சுக்ரன் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. நிலம், வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். சமயலறைச் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். ராசிக்கு 6-ல் சனி நிற்பதால் பெரிய பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாக முடியும். ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி நிற்பதால் மனஉளைச்சல், முன்கோபம், காரியத் தடை, வாகன விபத்துகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். கலைஞர்கள் விறுவிறுப்புடன் காணப்படுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு


தாராள மனசும், தயாள குணமும் கொண்ட நீங்கள், தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்க தயங்காதவர்கள். சூரியன், சுக்ரன், புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் நலம் சீராகும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். தியானம், யோகா இவற்றில் ஈடுபடுவது நல்லது. கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நிற்பதால் சிறுசிறு கவலைகள், வீண் டென்ஷன், செலவுகள் வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்களால் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். உத்‌தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. சக ஊழியர்கள் மதிப்பார்கள். வேலைசுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். சகிப்புத் தன்மையால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 16, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : நீலம், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு


கடமையுணர்வு, காரியத்தில் கண்ணாக செயல்படும் நீங்கள், தொட்ட வேலையை முடிக்காமல் தூங்க மாட்டீர்கள். இந்த வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். வீண் செலவுகளை குறையுங்கள். யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு ஒரளவு திருப்தி தரும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து செயல்படுவார்கள். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பதால் அவ்வப் போது மன இறுக்கம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், சகோதரர்களுடன் கருத்து மோதல் வரக்கூடும். 4-ல் சனி இருப்பதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். முதுகு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். உத்‌தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களைப் பற்றிய விமர்சனங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 17, 19 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு



எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதையும் செய்து கொடுக்கும் மனசுடைய நீங்கள், கடலளவு அன்பு கொண்டவர்கள். சுக்ரன் 8-ல் மறைந்ததால் வர வேண்டி பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கையிருப்பை கரைக்க வேண்டிவரும். சகோதர, சகோதரியால் நன்மை பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விட்டு முக்கியமான செலவை மட்டும் செய்யப் பாருங்கள். உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். 15, 16-ந் தேதி மாலை 5 மணி வரை முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். வார பிற்பகுதியில் அலைச்சல், வீண் செலவுகள் வந்து விலகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அக்கம்-பக்கம் வீட்டரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களின் தொந்தரவுளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியுண்டு. கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். சிந்தித்து செயல்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 18, 20, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு


எதிர்மறையாக யோசித்து, நேர்மறையாகச் செயல்படுவதில் வல்லவர்களான நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். கேது வலுவாக இருப்பதால் சில அதிரடி மாற்றங்கள் நிகழும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவியுண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அடாவடித்தனம் குறையும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு மீண்டும் வருவார்கள். பாதச் சனி நடைபெறுவதால் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். 16-ந் தேதி மாலை 5 மணி முதல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். குரு சாதகமாக இருப்பதால் கோவில் விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவுப் பிறக்கும். அரசியல்வாதிகளின் கருத்துக்களை மேலிடம் ஏற்கும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத் துறையினர்களின் ரசனைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புரட்சிகரமான முடிவுகளெடுக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, சில்வர்கிரே அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு


ஒற்றுமை உணர்வு அதிகமுடைய நீங்கள், எப்போதும் சமூகத்து அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடுவீர்கள். சூரியன் 6-ல் நிற்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். பழைய கடனைத் தீர்க்க சில உதவிகள் கிடைக்கும். தள்ளிப் போன கல்யாணம் நிச்சயமாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதைக் கூடும். 19, 20, 21-ந் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் வேண்டாம். ஜன்மச் சனி நடைபெறுவதால் பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். சிலரின் துரோகத்தை நினைத்து வருந்துவீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வாகனத்தை இயக்கும் போது அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்‌தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்லது கெட்டது அறிந்து செயல்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 16, 17 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு



கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழும் நீங்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் தடைகள், பயம் விலகும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்கள் பெற்றோரின் -ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். புதிய பாதையில் சென்று வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 19, 21 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், ஆலிவ்பச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு


   
மனதிற்கு சரியென படுவதை செய்யும் நீங்கள், எல்லோரையும் எளிதில் நம்பிவிடும் மனிதநேயம் உள்ளவர்கள். இந்த வாரத்தின் முற்பகுதி சிறப்பாக அமையும். சனி பகவான் வலுவாக நிற்பதால் கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சுபச் செலவு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ராகுவும், கேதுவும் சரியில்லாததால் குடும்பத்தில் சச்சரவு, பொருள் இழப்பு, தலைச்சுற்றல், பல் வலி வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை பல முறை கேட்டுப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்‌தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர்களுக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு
 
 

தடைகள் பல வந்தாலும் தயங்காமல் தடம் மாறாமல் தக்க தருணத்தில் பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள் தான். இந்த வாரத்தின் மையப்பகுதி வரை உற்சாகம் பொங்கும். சூரியன் 3-ல் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன்- மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சுப காரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவார்கள். 8-ல் செவ்வாய் நிற்பதால் முன்கோபம் வரும். தாய் வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்-. ராகு, கேதுவின் நிலை சரியில்லாததால் அலைச்சல், காரியத் தாமதம், வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரரை அனுசரித்துப் போவது நல்லது. உத்‌தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களுக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 16, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மெரூண் அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு


துவண்டு வருவோருக்கு தோல் கொடுத்து தூக்கி விடும் குணமுடைய நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டுமென நினைப்பீர்கள். ஃப்ரிஜ், மிக்சி வாங்குவீர்கள். சகோதரகள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களின் ஆலோசனையை பெற்றோர் ஏற்பார். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உணவு, புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களுக்கு பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். அனைவராலும் மதிக்கப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 15, 17, 19 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், கிரே அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

மற்றவர்களின் தயவு தாட்சியத்தில் வாழ விரும்பாத நீங்கள், தன் மானம் பெரிதென எண்ணி வாழ்பவர்கள். ராகு 11-ல் வலுவாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. நட்பு வட்டம் விரியும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க நேரிடும். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். கன்னிப் பெண்களின் புதுத் திட்டங்கள் நிறைவேறும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதர வகையில் பயனடைவீர்கள். சொத்து வாங்குவது விற்பது சுலபமாக முடியும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. ஜன்ம குருவால் வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர் பகை வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்‌தியோகத்தில் உயர் அதிகாரி உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். போராடி வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 16, 17, 18 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு


எளிமையின் இலக்கணமாக திக‏ழும் நீங்கள், பணம் காசு பதவியென வந்தாலும் பழசை ஒரு போதும் மறக்கமாட்டீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கண்டகச் சனி நடப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அனுபவ அறிவால் பழைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். கன்னிப் பெண்கள் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் எதிலும் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். 12-ல் குரு நிற்பதால் வீண் வதந்திகள், இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் இருங்கள். கலைத் துறையினர்கள் மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 17, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பழுப்பு, வெளிர் நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு
Login form
Login:
Password:

REGISTER

Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Subscribe to www.linoj.do.am by Email

CALENDAR
«  பங்குனி 2010  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Serch

TODAY_BIRTHDAYS

Today visit User


Statistics

Online Users
Total online: 3
விருந்தினர் : 3
உறுப்பினர்கள்: 0

இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

Chat


Site Friend
  • MUSIC
  • TAMIL2WORLD
  • NISANTHAN
  • GAJAN
  • PRAKASH

  • Vote Plz..
    Tamil Top Blogs

    My Topsites List
    My Topsites List


    Download Toolbar
    Download linoj Toolbar

    System Requirements
    Windows, Mac, Linux
    Internet Explorer

    Live Traffic Feed



    Copyright  இணையத் தமிழ் உலகம் © 2010
    Hosted by uCoz இணையத் தமிழ் உலகம்