நீங்கள் டீனேஜ்
பருவத்திலிருக்கிறீர்கள் உங்கள் கிளாஸ்மேட், பக்கத்து வீட்டு வாலிபன்,
தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம் பிடிக்கிறது. ஆனால்! இந்த
விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?
கதை,
கவிதை, திரைப்படம், ஓவியம், இன்டர்நெட் என்று எங்கு பார்த்தாலும் காதலைப்
பற்றிய பேச்சு! இருந்தும் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடியவில்லையா? நோ
பிராப்ளம்! கீழே உள்ள குறிப்புகள் நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று
தெரிந்து கொள்ள உதவும்!
அந்த `ஸ்பெஷல் நபரை' நினைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். இது காதல்தான் என்றால் :
முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.
உடைகள் வாங்கும் போது உங்கள் நினைவில் தோன்றுவது "இது `அவனுக்கு' பிடிக்குமா?" என்பது தான்!
பாடங்கள் படிக்கும் போது நினைவுக்கு வருவது `அவனோடு' என்ன பேசலாம் என்பது.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது காதில் விழுவது `அவன்' பேசியது மட்டுமே!
பர்பியூம், சென்ட் என்று வாசனைப் பொருட்கள் வாங்குவதில் காசு கரைகிறது!
டெலிஃபோன் மணி அடித்தால் தாவிச் சென்று முதலில் எடுப்பது நீங்கள்!
`அவனை' நேரில் சந்தித்தது பத்தாமல் டெலிஃபோனிலும், இன்டர்நெட்டிலும் மணிக்கணக்காக அரட்டை தொடர்கிறது.
`அவனக்கு'
விருப்பமான இசை, நடிகர்கள், (நடிகைகள் இந்த பட்டியலில் சேர முடியாது!)
விளையாட்டில் திடீரென்று உங்களுக்கும் ஆர்வம் இருப்பதை
கண்டுபிடிக்கிறீர்கள்!
நேத்து
வரை நண்பிகளோடு வெளியே செல்ல அம்மாவிடம் சண்டைப் போட்டது போக, `அவன்'
ஃபோன் செய்வார் என்ற காரணத்தால் அம்மாவே போகச் சொன்னாலும் வீட்டில் தங்கி
விடுவது.
பீச், சினிமா, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் `அவன்' வந்திருக்கிறார் என்ற பிரமை ஏற்படுகிறது.
திருமணம், திருமணமான தோழிகள் திருமண வாழ்வு, எல்லாம் `போர்' என்று நினைத்த காலம் போய்விட்டது.
ஃபோன் செய்யும் போது உங்களை அறியாமலேயே விரல்கள் `அவன்' எண்ணை தட்டுகிறது.
(இரவு முழுதும் `அவன்' நினைவில் தூக்கமே வரவில்லை என்றாலும்) அம்மா எழுப்புவதற்கு முன்பே காலையில் சுறுசுறுப்பாக எழும்புவது.
என்ன? இப்போதாவது குழப்பம் தீர்ந்ததா? இது காதல் தானா??!! |