திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும் |