தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்... பதிவு 2 இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம். கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன. எது எப்படி இருப்பினும் இந்த தொலைபேசி உரையாடல்கள் முலம் நடந்த சில சுவையான, யோசிக்கவேண்டிய சில சம்பவங்கள் இப்பதிவிநூடாக தருகிறேன். ஒரு நண்பர் தனது நண்பி ஒருவருக்கு இரவு 9 மணியளவில் அவசர செய்தி ஒன்று சொல்வதற்காக அழைப்பினை எடுத்து இருக்கிறார். அந்த நண்பி வேய்ட்டிங்கில் இருந்திருக்கிறார் நண்பரோ அவசர செய்தி சொல்லவேண்டியவர் பலதடவை அழைப்பினை எடுத்து பார்த்தார் அழைப்பு கிடைக்கவில்லை வேய்டிங்தான். நண்பரும் விடவில்லை நள்ளிரவு 1.30 போல் நண்பிக்கு அழைப்பு கிடைத்தது. நண்பர் கேட்டார் 9 மணிமுதல் 1.30 வரை இந்த இரவில் யாரோடு பேசுனிங்க என்று. நண்பி சொன்ன பதில் அண்ணாவோடு பேசினேன் என்றார். நண்பர் நினைத்தார் அண்ணா எதோ வெளி நாட்டில் இருக்கிறார் என்று. அண்ணா எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நண்பி சொன்னார் அண்ணா பக்கத்து ரூம்ல இருக்கிறார் என்று . நண்பருக்கு கோபம் கோபமாக வந்ததாம். ஒரு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ரூம்ல இருக்கும்இந்த நேரத்துல ...... கடவுள்தான் காப்பாத்தணும் பெரிய தேன்னை மரங்களிலே தேங்காய் பறிப்பவர்கள் மரத்திலே ஏறி தேங்காய் பறிக்கும் போது ஒரு தேங்காயை பறித்து கிழே போடுவார் கிழே நிற்பவர் அது தேங்காயா என்று பார்த்து சத்தம் போட்டு சொல்லுவார் மரத்தில் இருப்பவரும சத்தம் போட்டு தேங்காயா என்று கேட்பார் அது அந்த பிரதேசத்தில் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும். இது அந்தக்காலம். இன்று மரத்தில் ஏறுபவரும் கிழே நிற்பவரும் தொலை பேசியில் உரையாடுகின்றார்கள். இன்று வாகனங்களிலே பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. அது ஒருபுறமிருக்க. ஒரு தெருவோர பிச்சைக்காரன் ஒரு பேருந்து தரிப்பிடத்திலே. யாருமற்ற ஒரு பக்கம் சென்றான் என்ன செய்கிறான் என்று பார்த்தேன் தொலைபேசியை எடுத்து தனது மற்ற நண்பனிடம் சொல்கிறான் பஸ்சில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது உடனே வரவும் என்று. தொலைபேசி முலமாக நண்பர்களிடையே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எடம் பெறுவதோடு சில வேளைகளில் அவர்களது நட்புக்கும் பாதிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று ஒரு சம்பவம்தான் இது. ஒரு நண்பர் தன்னுடைய ஒரு நண்பரை கலாய்க்க விரும்பினார். அதற்கு தனது காதலியை துரும்பு சீட்டாக பயன் படுத்தினார். அது வேறு விபரிதமாகிவிட்டது. ஒருவர் தனது காதலியிடம் தனது நண்பனின் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து.தனது நண்பருக்கு அழைப்பினை எடுத்து யார் என்று சொல்லாமல் காதலிப்பது போல் கலாய்க்க சொல்லி இருக்கிறார். 2, 3 நாட்கள் நன்றாகவே நண்பரை குழப்பி இருக்கிறார்கள். அத்தோடு முடியவில்லை காதலியோ காதலனுக்கு தெரியாமல் அடிக்கடி அழைப்பினை எடுத்து கதலனின் நண்பனோடு காதலனுக்கு தெரியாமல் பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமா?........ இன்று குரல்களை மாற்றிப்பேசும் தொலைபேசிகள் முலமும் நிறையவே நம்ம பசங்கள பசங்களே பெண்களாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருகாங்க. பெண்கள் ஏமாற்றியது போதாதா நண்பர்களே நீங்களும் ஏமாற்றனுமா... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சொல்ல முடியாத விசயமும் நிறையவே இருக்குங்க...
Source: http://www.shanthru.blogspot.com |