பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய
சிறப்புப் பெற்றுள்ளது. பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு.
இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே
தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப்
பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக்
கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி
கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும்,
சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே
பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள்
அதிக அளவில் அடங்கி உள்ளன.
பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக்
கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால்
பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல்
தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு
உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்