கொழுப்புச்சத்து
காரண மாக உடல் குண்டான வர் கள் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். எவ்வளவோ
மருந்து மாத்திரைகளை உட் கொண்டு வந்தாலும் போதிய பலன் இல்லை.
இதனால் குண்டானவர் கள் உடல் இளைக்க உடற் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இங்கிலாந்து இருதய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.
அதாவது தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் மெலியுமாம்.
தினமும்
காலை டிபனுக்கு பதில் 2 முட்டை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து
12 வாரம் இது போன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து குறைந்து உடல்
மெலியும். அழகான தோற்றம் பெறலாம் என்று அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
தெரிவித்து உள்ளது. |