இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை
ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’
(இச்சை) மட்டுமே.
லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர்.
டான்மாய் சர்மா, ‘கண்டதும் காதல்’ குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18
வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
பலவித உணர்ச்சிகளை Magnatic Resonance Imagine Scan மூலம் ஆய்வு செய்தார்.
அப்போது தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள்,
உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப்
பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று பலவகை ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில்
காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய
வந்தது.
மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி
அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத்
தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச்
செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன. |