# தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி
இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள்
நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ /
அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும்
உண்ண வேண்டும்.
# எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.
# உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.
# உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும்,
முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம்.
இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால்
தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.
# அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன்
மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள்
போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித்
தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி
தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த
மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.
# தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது.
அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச்
சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில்
தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.
# வயது அதிகமாகும் போது. ... தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.
# கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை
மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச்
செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில்
ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி
சரியானதுதான்.
# கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில்
இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு
விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது
தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது.
எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது
இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும்
பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல்
தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல்
எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும்
இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.
Source: http://linoj.do.am |