linoj.do.am

சேவைகள்
CATEGORIES
மருத்துவ குறிப்புகள்
மருத்துவ கட்டுரைகள்
முத்தான முதலுதவிகள்
பொது
இதய நோய்கள்
வயிறு
தலை
பாலியல்
உடல் கட்டுப்பாடு
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » மருத்துவம் » பாலியல் [ Add new entry ]

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது?

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு,


அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையப்
பேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள் கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே

இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது

அப்படியெனில்,

அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

ஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளு ங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடா.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க் கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்த முள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல

காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.

மனப்பான்மை என்றால் என்ன?

உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங் களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக் கையாக மாறி விடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை

உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்

இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்

இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்

இன்றைய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக் கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.

ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.

அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?

கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந் தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? ஒ உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.

பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக் கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.

அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்து விடவில்ல. தாமாகவே பிரச்னை '

களுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக் காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.

தனித் தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றி களைப் பெற்றுத் தரும்.

ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவரோ, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.

அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படி ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?

ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,

அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!

வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தி யாசங்களை நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.

நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.

ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.

மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.

வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.

நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.

இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.

என் மனப் பான்மையை நான் கட்டுப் படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்தி விடும்.

எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.

என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்லை.

நான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.

நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.

மரியசார்லஸ்


Source: http://tamil-uyir.blogspot.com/2009/06/blog-post_06.html#ixzz0LrsBXg15
Category: பாலியல் | Added by: m_linoj (2009-07-21)
Views: 3918 | Comments: 1 | Rating: 0.0/0
Total comments: 1
0  
1 Vimal   (2009-07-21 2:39 PM) [Entry]
மிகவும் அருமையான பதிவு