“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால
உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது
குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம். இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர். 1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது. அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு
கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை
விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற
தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு
கொள்ளவும்) தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே
இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில்,
தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம்
தெரிவித்தார்களாம். தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு
ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை
ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை
கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும். |