சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » மருத்துவ குறிப்புகள் | [ Add new entry ] |
பற்கள் பராமரிப்பு
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... என பழமொழிக்கு சொல்லுவார்கள். நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது போகட்டும். இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது என பார்ப்போம். முதலில் பற்களின் பயன்பாடுகளை பார்ப்போம். 1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது. 2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது. 3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது. 4. உண்ணும் உணவை நன்றாக மென்று உண்பதற்கு பயன்படுகிறது. பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம். பற்களின் அமைப்பு 1,2 வெட்டுப்பற்கள். 3- சிங்கப்பல்கள் 4- முதல் கடைவாய்ப்பல் 5- இரண்டாம் கடைவாய்ப்பல். 20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன. நிலையான பற்கள். 1,2 - வெட்டுப்பற்கள். 3- சிங்கப்பல் 4- முதல் முன்கடைவாய்ப்பல் 5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல். 6- முதல் கடைவாய் பல். 7- இரண்டாம் கடைவாய் பல். 8-மூன்றாம் கடைவாய் பல். பற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது பற்றி அறிந்துகொள்வோம். பற்களை பாதுகாக்கும் வழிகள். 1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும். 2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். 3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும். 4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும். 5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும். பயன்படுத்துதல் வேண்டும். 7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். பாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய வாய் மற்றும் பற்கள். நன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய் மற்றும் பற்கள். பற்களில் வரும் பொதுவான நோய்கள். பற்களில் நோய் வரக்காரணங்கள் 1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது. 2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள். 3. தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட) 4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது. 5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு. (உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் பல் பிரச்சனைகள்). பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை. பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள். 1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல். (Pit and fissure sealant) பற்களின் மேல் செலுத்துதல். 3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.(filling) 4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல்(Scaling) கரைகளை சுத்தம் செய்தல். (Scaling) நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள். 1. பல்லை எடுத்தல். 2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல். 3. வேர் சிகிச்சை. 4. வேர் அறுவை சிகிச்சை. 5. ஈறு அறுவை சிகிச்சை. புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்" ஏற்படலாம். புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள். 2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல். 3. வலி இல்லாத வெண்படலம். 4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது) பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள். 1. பல் கறுப்பு நிறமாக மாறுவது. 2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது. 3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி. 4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம். 5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல். குழந்தைகளின் பல் பராமரிப்பு. 1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம். 2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம். 3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். 4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். 6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். 7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது. 8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும். 9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி? வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது சால சிறந்தது. இந்த கட்டுரையை படித்தபின் நீங்கள் மீண்டும் பல் துலக்குகையில் இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றியே. பல் பற்றிய படங்களை கொடுத்து உதவிய நண்பர் டாக்டர்.S.கார்த்திக்.B.D.S., அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்க வளமுடன், வேலன். | |
Views: 8069 | Comments: 2 | |
Total comments: 2 | |
| |