சமுதாயமாக
வாழப் பழகிக் கொண்டுள்ள தேனீக்கள் தங்களின் மெழுகாலான கூட்டை
நுண்கிருமிகளில் இருந்து சுத்தப்படுத்தி வைத்திருக்க என்று ரெசின் (resin)
என்றழைக்கப்படும் ஒருவகை உடலிரசயானத்தைச் சுரந்து அவற்றினை மெழுகோடு
கலந்து கூடுகளை அமைப்பதாகவும் அந்த ரெசின் இரசாயனம் பக்ரீரியாக்கள்,
வைரசுக்கள் என்று நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இயல்பைக்
கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாகவே தேன்
உடல்நலத்துக்கு நல்லது என்பார்கள். ஆனால் இப்போது தேன்கூட்டில் இருக்கும்
தேனீக்களின் சுரப்பான இந்த ரெசின் என்ற கூறு மனிதர்களில் நோய்களை
உருவாக்கக் கூடிய பக்ரீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்கிருமிகளை
மற்றும் புற்றுநோய்க் கலங்களின் பெருக்கத்தைக் கூட கட்டுப்படுத்தப் கூடிய
இயல்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்றி
தேன்கூட்டில் இருக்கும் இந்த இரசயானம் எயிட்ஸ் வைரஸான HIV- 1 இன் மீது கூட
தாக்கம் செய்வதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால் அதன் தாக்கத்தின் விளைவுகள்
குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை.
தேன் உடலுக்கு நல்ல மருந்து
என்று எம் மூதாதையோர் அனுபவத்தில் பகிர்ந்து கொண்டது உண்மையாகவே இப்போது
நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதற்காக நம் மூதாதையோர் சொன்னவை எல்லாம்
அறிவியல் மயமானவை என்பது பொருள் அல்ல. மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன.
ஆனால் எதனையும் அறிவியல் கொண்டு நிறுவ முதல் மூடநம்பிக்கை என்று
தட்டிக்கழிப்பது கூடாது என்பதையே இந்தக் கண்டுபிடிப்புக்கள்
உணர்த்துகின்றன.