யாஹூ, ஜிமெயில் போல இல்லாமல் இன்டர்நெட்
சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இமெயில் சேவை வைத்துள்ளவர்கள் ஏதேனும்
இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்குகிறோம்.
அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இடோரா எனப் பலவகையான இமெயில்
கிளையண்ட் புரோகிராம்கள் நமக்கு இவ்வகையில் கை கொடுக்கின்றன. நாம்
பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் நமக்கு நம் கம்ப்யூட்டரில் மாறாத
இமெயில் புரோகிராம் களாகச் செயல்படுகின்றன.
யாருக்கேனும் இமெயில் அனுப்ப இந்த புரோகிராம்களைத் திறந்து பின் Compose
அல்லது New என்னும் பிரிவில் கிளிக் செய்து இமெயில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான
விண்டோவினைப் பெற்று டெக்ஸ்ட் அமைத்து அனுப்புகிறோம். அவசர நேரத்திலும்
இது போல ஒவ்வொரு முறையும் இந்த புரோகிராம்களைத் திறந்து இந்த பணியை
வரிசையாக மேற் கொள்ள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இன்டர்நெட்டில் ஒரு
வெப்சைட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பயன்படும் தகவல் ஒன்றைப்
பார்க்கிறீர்கள். உடனே அதற்கான லிங்க் அல்லது அந்த தகவல் குறித்து உங்கள்
நண்பருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப எண்ணினால் மேலே சொன்ன ஒவ்வொரு
வேலையையும் மேற்கொண்டு பின்னர் அனுப்ப வேண்டியுள்ளது.
இதற்குப் பதிலாக ஒரு கிளிக்கில் இமெயில் கிளையண்ட் புரோகிராம்
திறக்கப்பட்டு புதியதான இமெயில் அமைக்கக் கூடிய வகையில் அதற்கான படிவம்
கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதியும் கம்ப்யூட்டரில்
உள்ளது. ஒரு ஷார்ட் கட் உருவாக்கி இதே போல வசதியை மேற்கொள்ள முடியும்.
இதற்குக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.
1. முதலில் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து
கிடைக்கும் மெனுவில் New என்ற பிரிவில் கிளிக் செய்து பின்னர் கிடைக்கும்
பிரிவுகளில் Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது கிடைக்கும் Create Shortcut என்ற சிறிய விஸார்ட் கிடைக்கும்.
இதில் Type the Location of the Item என்ற தலைப்பின் கீழ் நீளமான பாக்ஸ்
கிடைக்கும்.
3.இந்த பாக்ஸில் நீங்கள் அடிக்கடி இமெயில் அனுப்பும் நண்பர் ஒருவரின்,
அல்லது உங்களின் இமெயில் முகவரியினை முகவரிக்கு முன்னால் mailto எனச்
சேர்த்து mailto:your contact@email.com என டைப் செய்திடவும். அதன்பின்
நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.
4.இறுதியாக இந்த ஷார்ட் கட்டிற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்றோ அல்லது
என்றோ சூட்டுங்கள். அவ்வளவுதான். டெஸ்க்டாப்பில் இன்ஸ்டண்ட் இமெயில்
கடிதம் எழுத ஒரு ஷார்ட் கட் ரெடி.
5. இப்போது ஷார்ட் கட் கீயில் கிளிக் செய்திடுங்கள். கண் மூடித் திறக்கும்
நேரத்தில் உங்கள் இமெயில் புரோகிராம் திறக்கப்பட்டு மெயில் அனுப்ப
டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்த
முகவரியுடன் இந்த விண்டோ இருக்கும். அந்த இடத்தில் யாருக்கு இமெயில்
அனுப்ப வேண்டுமோ அந்த முகவரியினை டைப் செய்து Send கிளிக் செய்தால்,
இன்டர்நெட் இணைப்பில், இமெயில் சென்று விடும். |