கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...
பொதுவாக
கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving
your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில
நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.
இதெல்லாம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க
சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள்
கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் .
எந்த சேதமும் ஏற்படாது.
உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து
கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task
Manager திரைக்கு வரும் )
இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .