அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள்!
நீங்கள்
புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள்
என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து
இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு
செய்தார்கள்.ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை
மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும்
மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டது.இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது,
`15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு
உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு
ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை
பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி
எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர். |
Category: உடல் கட்டுப்பாடு | Added by: linoj (2009-07-31)
|
Views: 2439
| Rating: 0.0/0 |