ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட்
எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில்
படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை
உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின்
கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
இன்னொரு அரிய பயனும்
உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை
வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள்
பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.
Source: http://tamilchuvai.blogspot.com/2009/01/blog-post.html |