சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » பாலியல் | [ Add new entry ] |
ஒரு கணக்கு
காதல் என்பதென்ன? காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால
இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல்! ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும். ‘மலரினும் மெல்லிது காமம்’ என்றுதான் வள்ளுவன் குறிப்பிடுவான். காதலுக்குத் தனி அகராதி உண்டு அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும். பேருந்தில் ‘ஐயோ நிக்கிறாங்களே.. என்று எழுந்து இடம் கொடுத்தவனும்.. கும்பலாக நிற்கிறபோது, இந்த புக்ûஸக் கொஞ்சம் வெச்சிருக்கீங்களா...?‘ என்று தந்தபோது தயங்காமல் வாங்கி வைத்திருந்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தன்னை உணரும் பருவத்தில், இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில், தான் கவனிக்கப்படுகிறோம், எனும்போது, மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது!. படித்து முடித்த பிறகு குடும்பச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் சோர்ந்து போகும்போது, ’எப்படி இவ்வளவும் தாங்கறீங்க...?’ என்று ஆறுதல் வார்த்தைகள் பேசியவர் காதலனாக /காதலியாகக் கருதப்படுவதுண்டு. ‘இன்னாரோடு தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டால், காலம் முழுவதும் காப்பாற்றுவார்’ என்று பெண்ணின் நம்பிக்கையும் ‘இவள் என் மனம்போல் பணிவிடைகள் செய்வாள்’ என்று ஆணின் நம்பிக்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அவர்கள் லட்சியக் காதல்களாகி விடுவதும் உண்டு! இந்த மூன்று நிலைகளிலும் இணைத் துக் கொள்கிற, இணைந்துகொள்ள விரும்பு கிற உணர்வைக் காதல் என்று பொதுப்படை யாகச் சொல்கிறார்கள்!. காதலுக்கு மட்டும் தனி மரியாதை! வேலைவெட்டியில்லாத கவிதைகளும் வியாபாரம் பண்ணுகிற சினிமாக்களும் பொழுதைக் கொல்லுகிற கதைகளும் சேர்ந்து செய்த காரியம் இது. ‘காதல் பற்றி இனிமேல் புத்தகம் போடக்கூடாது... கவிதை எழுதக்கூடாது.. பிரசாரம் செய்யக் கூடாது..’ என்று ஒரு தடைச்சட்டம் போடுவது நல்லது. நம் அறிவு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படட்டுமே! திரைப்படங்களில் அவளும் அவனும் தெரியாமல் மோதிக் கொண்டவுடன், உடம்பின் உரசலில் காதல் பிறந்துவிடுகிறது அவனோ, அவளோ கோபத்தின் வேகத்தில் அறைந்துகொள்ள... கண்ணீருக்குப் பதில் காதல் வந்துவிடுகிறது! உடல் ஊனமுற்ற ஆணின் மீதும் பெற்றோரால கொடுமைப் படுத்தப்படும் பெண்ணின் மீதும் ஏற்படும் இரக்கமும்பூடக் காதலாகச் சொல்லப்படு கிறது! ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள் வதே சமயங்களில் காதலாகப் பார்க்கப் படுகிறது. மற்றவர்களை விட்டுவிட்டுப் பெற்றவர்களைக் கேட்போம். மகள் காதலித்தால் ‘எம் பொண்ணு சின்னக் குழந்தைங்க.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படியோ ஏமாந்திருக்கு...’ என்பார்கள் மகனாக இருந்தால், ‘ எம் புள்ள யாரையும் நிமிர்ந்து பார்க்காத பையன்... பாவி மக... என்ன மருந்து மாயம் வெச்சாளோ..? ‘ என்பார்கள். இப்போது காதல் வசப்பட்டவர் களிடம் வருவோம். அந்தப் பையன் அவ்வளவு சரியில்லையே.’ என்று சொல்லிப் பாருங்கள். அவரைப் பற்றி எனக்குத்தான் தெரியும்.. நல்லவர் தெரியுமா? என்பாள் பெண். ‘இந்தப் பொண்ணு வேணாம் விட்டுடுடா.’. என்று சொல்லுங்கள். அவ என்னைத்தான் நம்பியிருக்கா.. விட்டுடுனு ஈஸியா சொல்றீங்களே... என்பான், பெற்றவர் களுக்குப் பத்து ரூபாய் கூடச் சம்பாதித்துக் கொடுக்காத மகன்! இந்தக் கிளர்ச்சிக்கு வயது வித்தியாசமே கிடையாது! ‘நாற்பத்தைந்து வயது மனிதர்மீது வருவது அறிவுபூர்வமான காதல்’ என்பாள் இருபது வயசுப்பெண். சரி, அப்படியென்றால் அந்த மனிதருக்கு இந்தச் சின்னப் பெண்மீது ஏற்படுவது என்ன...? ‘அவருக்குப் பொண்டாட்டி சரியில்லப்பா.. அதான் பாசம் காட்டுன இடத்துல சாஞ்சுட்டாரு..’ என்று பழியை அவர் மனைவிமீது தூக்கிப் போட்டால், அந்தக் காதலுக்கும்(!) நியாயம் கிடைத்து விடுகிற உலகம் இது! ரவியும் ஜான்சிராணியும் காதலர்கள். பாதுகாப்புக்காகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு எப்போதும் போலவே அவரவர் வீட்டில் இருந்தார்கள். அப்பாவோடு ஜான்சி அமெரிக்கா செல்ல நேர்ந்தது: ‘அப்பாகிட்ட பேசி சரி பண்றேன் ‘ என்று ரவியிடம் சொல்லிவிட்டுத் தான் போனாள் ஜான்சி.. ஆனால் அங்கே போனவள். அப்பாவின் விருப்பப்படி இன்னொரு திருமணத்துக்குச் சம்மதித்தாள். பைத்தியம் பிடித்த ரவி. ‘என் மாமனார்,என் மனைவியை மறைத்து வைத்திருக்கிறார் ‘ என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான். இரண்டு லட்சம் செலவு செய்து மகளோடு கோர்ட்டுக்கு வந்தார் அப்பா. கோர்ட்டில் ரவிவையைப் பார்த்து. ‘இவரை யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனாள் ஜான்சி. இதே மாதிரி இன்னொரு வழக்கு... கோர்ட்டுக்கு அமுதா வரும்போது அம்மா, அப்பா.. அத்தை மாமா என்று உறவுப் பட்டாளமே பாதுகாப்பாகக் கூட வந்தது. அமைதியாக நின்றாள் அமுதா. இவரை உனக்குத் தெரியுமா..? என்று மகேந்திரனைக் காட்டி நீதிபதி கேட்டபோது. அடையாளம் பார்ப்பதற்காக அருகில் போனாள். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. முன்கூட்டிப் போட்ட திட்டம் இல்லை. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு. அத்தனை கும்பலையும் மீறித் தடதடவென்று பிடித்தார்கள் ஓட்டம்... பெற்றோர், போலீஸ் வழக்கறிஞர்கள், நீதிபதி, கோர்ட் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ஒரே ஓட்டம்தான்!. உணர்ச்சிவசத்தில் அதிரடியாக ஏதாவது செய்துவிட்டு பிறகு வருந்துவதும் திருந்துவதும்தான் பொதுவான காட்சிகளாகக் கண்ணில் படுகின்றன. மற்றபடி காதல் என்பது சாதாரண ஓர் உணர்வு மனதுக்கு இசைந்த ஒருவரோடு உடலாலும் இணைந்துவிட ஆசைப்படும் ஓர் உணர்ச்சி.. அவ்வளவுதான்! அந்தவிதமான உணர்வு, ஆசை வாழ்க்கையில் ஒரே முறை, ஒரே ஒருவர்மீது மட்டுமே வரும் என்பதெல்லாம், காதலியின் கால் மண்ணில் பட்டவுடன் காதலனுக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி மிகைப்படுத்தல்தான்! ஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம், அமைப்புமுறை இப்படிப் பல காரணங்களுக்காகக் காதல் என்பது ஒருவரைத் தவிர இன்னொருவர்மீது ஏற்படாது என்று கொஞ்சம் அதிகமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், இரண்டாவது திருமணம் செய்கிற ஆண்கள்மீது ஏன் கோபப்படுகிறீர்கள் எனலாம்.? என் வாழ்க்கையில்... இலக்கிய மேடைகளிலும் திராவிடர் கழக மேடைகளிலும் எதிலுமே சமரசம் செய்து கொள்ளாத, கொள்கைப் பிடிவாதம் கொண்ட ஒரு போராட்டக்காரப் பெண்ணாகத்தான் நான் அறிமுகமானேன்... ‘இவரா...அவரா...?’ என்றெல்லாம் பலரோடு பேசப்பட்டு, யாரோடும் நான் இணைந்து வாழ முடியாது! என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில் என்னைப் பற்றி ‘விடுதலை’ வைத்திருந்த கவலை, அக்கறை என்னைக் கவனிக்க வைத்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளாக நானும் விடுதலையும் ஒரே கொள்கையுடைய நண்பர்களாக இருந்தோம். ‘எத்தனையோ பொண்ணுங்க பொதுவாழ்க்கைக்கு வந்திருந்தாங்க. அவங்கள்ல பலர், கொள்கையே இல்லாம வெறும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவே நின்னுட்டதுண்டு. கல்யாணம் பண்ணிட்டு, அப்படியே மெள்ள விலகிப் போனவங்களும் உண்டு. அருள்மொழிங்கிற நெருப்பும் அப்படி அணைஞ்சு போயிடக்கூடாது. திருமணம். குழந்தை குடும்பம்கிற எந்த மாற்றங்களாலும் அருள்மொழி தொலைஞ்சு போயிடக் கூடாது என்கிற அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்தது. நம்முடைய உணர்வுகளையும் வாழ்க்கைமுறைகளையும் மதிக்கிற இந்த நண்பரோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது, மற்றபடி இதில் காதல் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை! பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும்தான் எங்களை இணைத்தது! காதல் என்பது,மனமும் உடலும் போடும் சிக்கலான கணக்கு என்பதுதான் என் முடிவு ‘காதல் அடைதல் உயிரியற்கை‘ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியார் சொல்கிறார்... ‘காதல் என்பது தெய்வீகமானது என்று சொல்வதி லிருந்தே இரண்டுமே பொய் என்று புரிந்துகொள்ளலாம்...’ நன்றி : காதல் படிக்கட்டுகள் (விகடன் பிரசுரம்) | |
Views: 1745 | |
Total comments: 0 | |