திருமணமான தம்பதியர்களின் வாழ்வில் ஆரம்பத்தில் இனிமையான நாட்கள் நீடித்தாலும், காலப்போக்கில் அந்த நாட்கள் மெல்ல குறைய ஆரம்பிக்கின்றனர்.
இதற்கு காரணம் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொள்ளாமையே காரணம். இனிமையான நாட்களுடன் நல்லறமாய், இல்லறம் நடக்க இதோ வழிகள்.
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும்.
வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிறதோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.
பாதுகாப்பு
ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது.
பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விடயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.
பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.
மரியாதை
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விடயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும்.
அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
அன்பு
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை.
அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.
நேர்மை
நல்ல விடயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன்.
என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு. |