# உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு
அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை!
வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்... உடலின்
தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.
# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால்
பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை
களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.
# விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..
* மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
* பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா..ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.
* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும்
காயவைத்துப்பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத்
தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும்
அப்பாவாகலாம்.
# காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள்
சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10
பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம்
இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும்.
(குறிப்பு : இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம்.)
# இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம்
போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது
சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும்
சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால்
முழுபலன் உண்டு. |