ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது.
ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது.
அதனால் உள்ளுறுப்புகளை மது வெகு வேகமாக தாக்கும். மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகள் உடனடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
நேரடியாக இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது.
குறைப்பிரசவம் ஆகவும், கருக்கலைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.
உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள்.
போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும். |