பொதுவாக
கருமுட்டை உற்பத்தி இருக்கும் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள
முடியும். ஆனால் சில பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வரன் அமைவதில்லை.
அதனால் திருமணம் தாமதமாகிறது. மேலும் வேலை பார்க்கும் பெண்களில்
சிலர் உயர் பதவியை பெற வேண்டும், வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்த
பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள னர். இதனாலும்
அவர்களின் திருமணம் தள்ளிப் போகிறது. இதுபோன்று 30 முதல் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்யும் பெண்கள் குழந்தை பெற உறைய வைத்த கருமுட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமணத்துக்கு
தாமத மாகும் நல்ல உடல்நலமுள்ள பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்படுகின்றன.
அவை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணத்தில் திரவ நைட்ரஜனில் வைத்து
பாதுகாக்கப்படுகிறது. அந்த கருமுட்டை செயல் இழக் காமல் இருக்க அதற்கு
ஹார்மோன்கள் ஊசிமூலம் செலுத்தப்படுகின்றன. இவ்வாறு
பாதுகாக்கப்படும் கருமுட்டைகளை 30 முதல் 40 வருடங்கள் வரை பாதுகாக்க
முடியும். இந்த கருமுட்டையின் மூலம் தேவையானபோது பெண்கள் குழந்தை பெற்றுக்
கொள்ள முடியும். கருமுட்டையை உறைய வைக்க ரூ.1 லட்சத்து 50
ஆயிரம் வரை செலவாகும். அவற்றை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்
தேவைப்படும். இந்த தகவலை கருவூட்டல் நிபுணர் டாக்டர் கிரிஷிகேஷ்பை
தெரிவித்தார்.
Source: http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1247487802&archive=&start_from=&ucat=2& |