முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம்.
அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மென்மேலும் அதிகரிக்கும்.
அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இவையிரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
மஸ்காரா
வெளியே ஏதாவது பார்ட்டிக்கு செல்வதென்றால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக மஸ்காரா விளங்குகிறது.
நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது.
ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.
மாய்ஸ்சுரைஸ்
கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும்.
ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.
எண்ணெய்கள்
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம்.
இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும்.
அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும்.
உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும்.
இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல்லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே. |