முகமும், கேசமும் மட்டுமே பொலி வோடும்,
இளமையோடும் இருந்தால் போதுமா? கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர்
அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள்
உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில
ஆலோசனைகள்....
கைகள் வழவழப்பாக...
சில பெண்களுக்கு உள்ளங்கைகள் எப்போ துமே சொர சொரப்பாக இருக்கும். இவர்கள்
தங்கள் கைகளை அதிக நேரம் டிடெர்ஜென்ட், சோப், பாத்திரம் துலக்கும் பவுடர்
போன்ற வற்றில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். கைகளுக்கான பிரத்யேக
சிகிச்சையான மெனிக்யூர் வாரம் ஒரு முறையாவது செய்யப் பட வேண்டும். இதன்
மூலம் கைகள் வழவழப்பாக, பளபளப்பாக இருப்பதுடன், சுருக்கங்கள் நீங்கி
கைகளில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
விரல்கள் அழகாக...
சிலருக்கு விரல்கள் குட்டையாக இருக்கும். இவர்கள் விரல்களை நீளமாகக்
காட்ட, நகங் களை நீளமாக வளர்த்துக் கொள்ளலாம். அதே போல் நீளமான விரல்களை
உடையவர்கள் நகங்களைக் குட்டையாக வளர்த்துக் கொள்ளலாம்.
நகங்கள் உறுதியாக...
நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமலும், கோணலாக வளைந்து வளராமல், நேராக
வளரவும் கால்ஷியம் சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக்
கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும், நகங்களுக்கும் மிகவும்
நல்லது. பொதுவாக விரல் நகங்களை ஓவல் வடிவத்தில் வெட்டி விடுவதே நல்லது.
ஆனால் எல்லோருக் கும் இது பொருந்தாது. எனவே அவரவர் விரல்களுக்குப்
பொருந்துகிற படி சதுரமாகவோ, வட்ட மாகவோ வெட்டிக் கொள்ள லாம். நகங்களுக்கு
தினமும் நெயில் பாலிஷ போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் நகங்களின்
இயல்பான நிறம் மறைந்து விடும். கூடிய வரையில் நெயில் பாலிஷ தடவுவதைத்
தவிர்த்து மருதாணி இட்டுக் கொள்ளலாம்.
கருமை நீங்க...
ஒரு சிலருக்கு கைகளின் பின்புறம் அதாவது முழங்கை களில் கறுப்பாக
இருக்கும். இவர்கள் தினமும் எலுமிச்சம் பழ மூடியில் முழங்கைகளை பத்து
நிமிடங்கள் தேய்த்து ஊறிக் கழுவி வரலாம். கைகளின் மேல்புறத்தில் வெண்
படலம் தோன்றினால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
தேய்த்து, ஊறிக் குளித்து வந்தால் மறைந்து விடும். இவை தவிர, உடலில்
கொழுப்பு சோராதபடி முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் கைகளிலும்
கொழுப்பு சேராதபடி அழகாக வைத்துக் கொள்ள முடியும். |