வெயில், தூசி, வெப்பம் என்று நிறம் மாறிப்போன சருமத்தை சில இயற்கையான முறையில் பேக் போட்டு முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்.உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருக்கா? தினமும்
குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10 நிமிடம்
வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும். செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் பளிச்.. கல் உப்பு, ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து உடம்பில் ஸ்கிரப் செய்யலாம். உங்கள் முகத்தில் எண்ணெய் பசை சருமமா..? எண்ணெய்
பசை சருமம் உள்ளவர்களுக்கு முதுகுப் பகுதியில் கரும்புள்ளிகள் வரலாம்.
அப்படி இருந்தால் குளிக்கும் பொழுது பாடி ஸ்கிரப்பர் பயன்படுத்தி
தேய்க்கவும். ஸ்கிரப் செய்வதால் தோல் மென்மையாகும். இரத்த ஓட்டமும் சீராகும். எண்ணெய்
சருமம உள்ளவர்களுக்கு உடல் ஹீட்டாகி பரு வரும். அப்படி வந்தால்
ஜாதிக்காயினை உரசி 4 நாள் போட்டால் உடனே மறைந்துவிடும். அதன்
கரும்புள்ளிகளும் போய்விடும். தினமும் 2முறை காலை, மாலையிலும் தக்காளி நன்றாக மசித்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.. உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி முகம் பொலிவாக இருக்கும். |