வெயிலினால் சிலருக்கு கழுத்து பகுதி கருத்து போய் அழகில்லாமல்
இருக்கும். முகத்தின் கலருக்கும் கழுத்தின் கலருக்கும் வித்தியாசமாக
இருக்கும். ஆகையால் நீங்கள் முகத்துக்கு என்னவெல்லாம் பூசுறிங்களோ அத்தனையும் கழுத்துக்கும் சேர்த்து பூசுங்க. கழுத்துக்கு அழகு சேர்க்க: கோதுமை
மாவு, ஓட்ஸ் தூள், பாசிப்பயிறு மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக
குழைத்து நன்றாக கழுத்தில் அழுத்தி தேய்த்து 20 நிமிடம் அப்படியே விட்டு
விடவும். பிறகு கழுவி விடவும். பப்பாளிபழத்தின் தோல்/ எலுமிச்சை தோல்/ ஆரஞ்சுத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம். முட்டைகோஸை அரைத்து அந்த சாரை தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கலாம். பயத்தமாவு, ஆலீவ் ஆயில், ரோஸ்வாட்டர் கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை மறையும். செயின் போட்டு சிலருக்கு பின் கழுத்து கருத்து போய்யிருக்கும் அதனை போக்க: சிறிது பால், தேன், எலுமிச்சைசாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசிவிடவும். கடலைமாவு தயிர் கலந்து தடவலாம். |