சில பெண்களின் கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.
இந்த கருவளையங்கள் ஏற்படக் காரணம் என்ன?
பரம்பரைத் தன்மை, சரியான அளவு தூக்கமின்மை, இரத்த சோகை, சத்தில்லாத
ஆகாரம், கண்களுக்கு அளவுக்கதிகமாக வேலை கொடுப்பது, உடல் நலத்தில் ஏதாவது
கோளாறு என கருவளையங்கள் தோன்ற ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
எனவே, கருவளையம் ஏற்பட்டிருக்கும் ஒருவருக்கு எந்த காரணத்தினால் இது
ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளித்தால்
கருவளையம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகும். |