குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை என்றால் அது சளி தொல்லைதான். இதனை எளிய நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம்.
இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.
வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நாட்களுக்கு இது போன்று செய்தால், ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
இதேபோல் மற்றொரு குறிப்பும் உள்ளது. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல்
ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து
கொடுத்தாலும் ஜலதோஷம் நீங்கிவிடும்.