linoj.do.am

சேவைகள்
CATEGORIES
சமையல்கலை
தாய் சேய் நலன்
அழகு குறிப்பு
ஹலோ தோழியரே
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » பெண்கள் உலகம் » தாய் சேய் நலன் [ Add new entry ]

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால்
குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

-- பெற்றோருடன் அதிக ஒட்டுதல் எற்படும் (Bonding)

-- பெற்றோர்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால் தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும் (Understanding)

-- குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் (Sharing of experiences) -- பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு சந்தர்ப்பமாக அமையும் (Passing of the knowledge) -- குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் (Building trust) -- தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும் (Self-esteem)

பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள், தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்" (Quality Time) என்று கூறுகிறார்கள். ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது. அதற்கென்று சில அம்சங்கள் இருக்கின்றன:

-- குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும் (alone with and interacting with the child). இதிலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஏதோ ஒரு கல்யாணத்துக்குக் குழந்தையுடன் போய்வந்து விட்டு, "இன்று நான் என் குழந்தையோடு தரமான நேரம் செலவழித்தேன்" என்பது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து இருவரும் தனித் தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் அதுவும் சரி கிடையாது. இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் (focussed time) என்றும், இணைந்து இருக்கும் நேரம் (hang around time) என்று இருவகைகள் உண்டு. ஒருமித்த நேரம் என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது. இணைந்து இருக்கும் நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது (முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100% குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.

-- சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது (demonstrating love through words and actions). நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் இதனைச் சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யலாம்.

-- சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும் (having a special impact). ஒருமிக்கும் நேரம் (connect times) என்று ஒன்று உண்டு. அதாவது நாம் குழந்தையை நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின் அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள். இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

-- குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது (child initiated and child sanctioned activities). அதாவது குழந்தைக்குப் பிடித்தமான ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும். ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத் தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.

தரம் என்பதோடு நேரத்தின் அளவும் (quantity of time) முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.

குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல் பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.
Category: தாய் சேய் நலன் | Added by: linoj (2009-05-27)
Views: 1815 | Comments: 3 | Rating: 5.0/3
Total comments: 3
0  
3 kalyansuresh   (2009-06-04 10:41 AM) [Entry]
surprised its geat for you and very thanks to