உலகிலேயே மிகப்பெரிய குகை வியட்நாமில் உள்ள சான் டூங் (Son Doong Cave) என்ற குகை தான்.
சுமார் 8 கிலோ மீற்றருக்கு மேல் நீளம் கொண்டது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், 1991 வரை இந்தக் குகை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
லாவோஸ் - வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகை, 150 தனித்தனி குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்ட அமைப்பாகும்.
'சான் டூங்' என்றால் 'மழை ஆறு' என்று பொருள். சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஆறு ஓடியதில், இந்த குகை உருவாகியுள்ளது.
குகையின் கூரை ஒரு பகுதியில் உடைந்து, உள்ளே ஒரு மழைக் காடே உருவாகியுள்ளது.
இந்தக் காட்டை 'கார்டன் ஆஃப் ஈடம்' (Garden of Edam) என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனம் உருவாகி, அதில் பறக்கும் நரி, இருவாச்சி, குரங்கு, பூச்சி வகைகள் போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.
பல நூற்றாண்டுகளாக மணல் துகள்களின் மேல் ஆற்று நீர் சொட்டு சொட்டாக வடிந்து, பல அழகிய படிமானங்களை உருவாக்கியுள்ளது.
ஆக்ஸாலிஸ் என்ற மூர் நிறுவனம், இந்த குகைக்குள் மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது.
மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்த சுற்றுலா மிகவும் சுவாரஸ்யமும், திகிலும் கலந்த சுகமான அனுபவமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
|