கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது.
மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு.
கஞ்சாவும்
மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும்
மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை
சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.
ஆனால் மரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும்.
ஐபோன்
சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த
செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும்
ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை
பொருளாக கருதப்படும் மரியூனா கிடைக்கும் இடங்களை காட்டக்கூடிய செயலியை
அஜ்னாக் டாட் காம் என்னும் நிறுவனம் கனாபிஸ் எண்னும் பெயரில் அறிமுகம்
செய்துள்ளது.
ஆனால் சாட்டரீதியாக மருத்துவ தன்மையோடு அது விற்கப்படும் இடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.
இதே போல பெட்ரோல் நிலையங்கள் மற்றும் நண்பர்களின் இருஒப்பிடத்தை காட்டும் செயலிகளும் உருவாக்கப்ப்ட்டுள்ளன.
Source: http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1248201583&archive=&start_from=&ucat=2& |