* உங்களை தயார்படுத்துங்கள்: எந்த துறை
சம்பந்தமான வேலைக்கு நீங்கள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள்
தயார்படுத்துங்கள். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி
பதில் அளிப்பது என்று வீட்டிலேயே பிராக்டிஸ் செய்யுங்கள்.
* கம்பெனி பற்றி அறிந்து கொள்ளுங்கள்: இன்டர்வியூ செய்யும் கம்பெனி பற்றிய
தகவலை, முடிந்த அளவு இன்டர்நெட் மூலமோ, நண்பர்கள் மூலமோ தெரிந்து வைத்துக்
கொள்ளுங்கள். இதன் மூலம், கம்பெனியில் உங்களைப் பற்றிய நம்பகத் தன்மையை
உயர்த்த முடியும்.
* அரை மணி நேரத்திற்கு முன் செல்லுங்கள்: இன்டர்வியூ நடக்கும் இடத்தை,
இன்டர்வியூ அன்று தெரிந்துகொள்ளாமல், முன்கூட்டியே தெரிந்து வைத்துக்
கொள்ளுங்கள். இன்டர்வியூ 10 மணிக்கு என்றால், சரியாக 10 மணிக்கு போவதை
விட, அரை மணி நேரத்திற்கு முன்பாக அங்கு இருக்கும்படி செல்லுங்கள். இப்படி
செல்வதால், எந்தவித டென்ஷனுமின்றி இருக்கலாம். அதன்மூலம் கேட்கப்படும்
கேள்விகளுக்கு டென்ஷனின்றி பதிலளிக்க முடியும்.
*தயங்காமல் பதிலளியுங்கள்: உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எத்தகைய
தயக்கமும் இல்லாமல் பதில் அளியுங்கள். அதே போல், தெரியாத கேள்விகளுக்கு
சுற்றி வளைக்காமல், இதற்கான பதில் தெரியவில்லை என ஒப்புக் கொள்ளுங்கள்;
அதில் தவறு ஒன்றுமில்லை.
* மொழித்திறனை வெளிப்படுத்துங்கள்: பெரிய நிறுவனங்கள் அனைத்துமே
ஆங்கிலத்தில் தான் இன்டர்வியூ நடத்துகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க
ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் என்பதில்லை. தேவைப் பட்டால்,
இன்டர்வியூ எடுப்பவரிடம் அனுமதி கேட்டு தமிழிலும் பதிலளிக்கலாம்.
* நல்ல ஆடையும், புன்னகையும் அணியுங்கள்: "ஆள் பாதி ஆடை பாதி' என்பர்.
எனவே, இன்டர்வியூக்கு செல்லும் போது உங்கள் ஆடையில் தனி கவனம்
செலுத்துங்கள். நன்றாக ஆடை அணிபவர்களையே நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர்களாகவும், திறமையாளர்களாகவும், கடினமாக உழைக்கும்
தலைவர்களாகவும் பலரும் அடையாளம் காணு
கிறார்கள். எனவே, நீங்கள் அணியும் ஆடையில் அக்கறை செலுத் துங்கள். அதோடு,
உங்கள் முகத்தில் புன்னகையை தவழவிடுங்கள். கேட்கப் படும் கேள்விகளுக்கு
புன்முறுவலு<டன் பதில் கூறுங்கள்.
* தேவையற்ற வார்த்தைகளை பேசாதீர்கள்: உங்களுக்கு கேட்கப்படும்
கேள்விகளுக்கு, சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் கூற முயலுங்கள்.
அனாவசியமாக பேசிக் கொண்டிருக்காதீர்கள். தேவையற்றதை பேச வேண்டாம்.
* உங்கள் முந்தைய அலுவலகத்தை பற்றி அவதூறு கூறாதீர்கள்:
இன்டர்வியூவில் பொதுவாக கேட்கப்படும் ஒரு கேள்வி, ஏன் பழைய வேலையை
விடுகிறீர்கள்? இப்படி கேட்கும் போது, உண்மையை சொல்லும் பேர் வழி என
நினைத்துக் கொண்டு உங்கள் பழைய அலுவலகத்தைப் பற்றி அவதூறாக பேசாதீர்கள்;
அவை உண்மையாக இருந்தாலும் கூட. மாறாக, பர்சனல் பிராப்ளம் அல்லது வேறு
ஏதாவது காரணங்களை சொல்லி சமாளியுங்கள். இல்லாவிடில், இன்டர்வியூ
எடுப்பவரிடம் உங்களைப் பற்றிய மதிப்பு குறையுமே தவிர, கூடாது. |