1.விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை
பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை
(அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.இதனால் நகை பெட்டி நகைபெட்டி
என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட்
பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.
2. தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும்.
கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம்.
அப்படி அணிபவர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி வரும்.
3. முக்கியமாக பிரேஸ்லேட் அணிவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில்
பார்த்தும் இருக்கிறேன், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறேன்.
ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி
வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.
4. அடுத்து கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும்
போட்டு இருப்பார்கள்.
அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா
செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி
கொள்ளவும்.
5. கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது
அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும் சேஃப்டி பின் தான் நேர்
வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி
விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும். |