சேவைகள் |
CATEGORIES | ||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » சிறுவர் உலகம் » தெரிந்து கொள்ளுங்கள் | [ Add new entry ] |
மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.
கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான். * இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது. * நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது. * நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது. * ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம். * இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும். * மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. * மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும். * நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது. * உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது. * நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும். * உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. * இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது. * மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது. * பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும். * மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. * தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர். * நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும். * உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது. * நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான். * நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும். * மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது. * பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான். Source: http://linoj.do.am | |
Views: 2149 | |
Total comments: 0 | |