இங்கிலாந்தின் அரசியல் அமைப்பை விரிவாக
ஆய்வு செய்வதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு. பாராளுமன்ற அரசாங்கத்தின்
தாயகம் என இங்கிலாந்து கருதப்படுகிறது. இங்கிலாந்தின் பாராளுமன்றம் தற்கால
பாராளுமன்றங்களின் தாய் என போற்றப்படுகிறது. அதன் அரசியலமைப்பு
எழுதப்படாதது. எனினும், மக்களாட்சியின் அடிப்படை ஆவணமாகக் கருதப்படுகிறது.
அரசியல் பிரச்சினைகளைப்பற்றி இங்கிலாந்து மக்கள் தெளிவான கருத்தும்,
ஒற்றுமைப்பண்பும் அரசியல் தலைவர்களிடம் நன்மதிப்பையும் வைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் சமூக, அரசியல் அமைப்பிற்கும் அதன் பூகோள அமைப்பிற்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. ஐரோப்பா கண்டத்தில் வட மேற்கில் கடலால்
சூழப்பட்ட ஒரு சிறிய நாடான இங்கிலாந்தின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில்
0.2% மட்டுமேயாகும். ஆங்கில கால்வாய் மூலம் பிரிக்கப்பட்டுள்ள
இங்கிலாந்தின்;; நிலப்பரப்பு நான்கு பெரிய பகுதிகளைக் கொண்டதாகும். 1)
ஸ்காட்லாந்து 2) இங்கிலாந்து 3)வேல்ஸ், 4) வடஅயர்லாந்து. பல தீவுகளின்
கூட்டமாக இருப்பதினால் பிரிட்டனுக்கு ஒருநிரந்தர படை தேவையிருக்கவில்லை.
ஆனாலும் அதன் வலுவான கப்பல்படையின் தேவைகளுக்காக பிரிட்டன்ஒரு நிரந்தர
படையை வைத்துள்ளது.
இங்கிலாந்து மக்களின் அரசியல் கலாச்சாரம் பழமை கொள்கை ஆகும்.
இக்கொள்கையின் காரணமாக அரசியலில் தீவிர, திடீர் மாற்றங்களை மக்கள்
எப்பொழுதும் விரும்பு வதில்லை. அரசியல் மாற்றங்கள் அரசியல்
நிறுவனங்களுக்கு எவ்வித சீர்குலைவையும் ஏற்படுத்தாத முறையில் நிகழ
வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 1688-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்பட்ட
மாண்புமிகு புரட்சி 1707ம் ஆண்டில் ஹனோவர் என்ற ஜெர்மானிய அரச குடும்பத்தை
ஆங்கில சிம்மாசனத்தில் அமர்த்தியது. மாற்றங்கள் நீண்டநாள் ரத்தம் சிந்தி,
நடத்தப்பட்ட உள்நாட்டு போருக்குப் பிறகு தான் ஏற்படுகின்றன. ஆனால்
இங்கிலாந்தில் அவை ஒரு சிம்மாசன உரையின் மூலம் அறிவிக்கப்பட்டன.
இங்கிலாந்தில் ஒரேயொரு அரசாங்கம் மட்டுமே அமைந்துள்ளது. மத்திய அரசாங்கம்
மற்றும் மாநில அரசாங்கம் என்ற பாகுபாடு கிடையாது. இது ஒற்றையாட்சி
முறைக்கு இங்கிலாந்து சிறந்த உதாரணமாகும். கூட்டாட்சி முறைக்கு இந்தியா,
அமெரிக்கா, சுவிஸ் சிறந்த உதாரணங்களாகும்.
இங்கிலாந்தின் அரசியலமைப்பு பாராளுமன்ற இறைமைக்கு வகை செய்கிறது.
பாராளுமன்றம் இயற்றுகின்ற சட்டத்தை செல்லாது என சொல்லும் அதிகாரம்
நீதித்துறைக்கு கிடையாது. பிரிட்டனின் பாராளுமன்றம் ஓர் ஆணை
பெண்ணாக்குவதையும், பெண்ணை ஆணாக்கு வதையும் தவிர வேறு எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என்பர்.
இங்கிலாந்து மக்கள் அரசியல் விழிப்புணர்வு உடையவர்கள் மரபுகளை மீறுகின்ற
அரசியல் தலைவர்கள்; மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே
இங்கிலாந்து மக்களும், தலைவர்களும் மரபுகளை மதித்து நடக்கின்ற னர். சட்டம்
எனும் வெறும் எலும்புக்கூட்டிற்கு, அழகூட்டும் சதையாக மரபுகள் அமைந்துள்ளன
என்று ஜென்னிங்கஸ் எனும் அறிஞர் கூறுகிறார். இங்கிலாந்து மக்கள் பழமை
விரும்பிகள். எனவே அவர்கள் பாரம்பரியமான மன்னர் அல்லது அரசிப்பதவி
தொடர்ந்து இருப்பதை விரும்புகின்றனர். அரசி தமக்கு பாதுகாப்பு அளிப்பார்
என்பதை மக்கள் நம்புகின்றனர். அரண்மனையில் அரசி இருக்கிறார் என்ற
எண்ணத்தில் மக்கள் நிம்மதியாக தங்கள் வீடுகளில் தூங்குகின்றனர் என்பர்.
இத்தகைய பல்வேறு நடைமுறைப்பயன்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையின் காரணமாக
அரசப் பதவி அங்கு தொடர்ந்து இருந்து வருகிறது.
சட்டத்தின் ஆட்சி அரசியலமைப்பின் மற்றொரு சிறப்புப்பண்பு. சட்டம்
முதன்மையானது என்பதைத்தான் சட்டத்தின் ஆட்சி குறிப்பிடுகின்றது.
சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஒருவருமில்லை. சட்டம் மக்களை பாகுபாடு
செய்வதில்லை. எல்லோரும் சட்டத்தின் முன் சமம். ஏதேச்சதிகாரமாக கைது
செய்வதும், காவலில் வைப்பதும், தண்டனை அளிப்பதும் சட்டவிரோத மானவை.
மக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை சட்டத்தின் ஆட்சி அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நீதித்துறையில் இக்கோட்பாடு பின்பற்றப்படுகிறது.
பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாகவும், ஆட்சித்துறையின் தலைவராகவும் உள்ள
அரசியார், கோட்பாட்டளவில் அனைத்து அதிகாரங்களையும் உடையவர். அரசியாரையும்,
பிரபுக்கள் சபையையும், மக்கள் சபையையும் கொண்ட பாராளுமன்றம்தான் சட்டங்களை
உருவாக்குகின்றது. ஆனால் நடைமுறையில் பாராளுமன்றத்தின் இறைமையை
செயல்படுத்தி அமைச்சரகங்களை உருவாக்கவும், அழிக்கவும் உண்மையிலே அதிகாரம்
கொண்டதாக விளங்குவது மக்கள் சபையாகும் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கும்
பொழுது இங்கிலாந்து மன்னராட்சியை உடைய நாடாகவும், நடைமுறையில் மக்களாட்சி
நாடாகவும் விளங்குகிறது. முடியாட்சி போல தோற்றமளிக்கும் இங்கிலாந்தின்
அரசியலமைப்பு நடைமுறையில் ஒரு மக்களாட்சியாக மட்டுமின்றி குடியரசாகவும்
திகழ்கின்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. தேசிய வாழ்விலும், பன்னாட்டு
உறவிலும் அன்றாடம் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப எப்பொழுதும்வளர்ந்து
கொண்டே இருக்கும் இங்கிலாந்தின் அரசியலமைப்பு மற்ற அரசியலமைப் புகளுக்கு
ஒரு முன்னோடியாகும். |