இரவு நேரத்தில் தூங்கும்போது படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன் படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இரவு நேர மங்கலான அளவில் விளக்கு ஒளி இருந்தால் கூட மூளைக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மூளையின் கட்டமைப்புகளையும் மாற்றிவிடும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் படுக்கை அறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்ற அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக எலிகளை வைத்து சோதனை செய்தபோது 8 வாரங்களில் அவற்றின் மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.
Source: http://sivatharisan.karaitivu.org/2010/11/blog-post_9276.html |