விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ
பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள். சாக்குப்பையை
சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தியணைக்கும் முறை. சாக்குப்பையை பொருள்
தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைக பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் மீது
தீப்பிடிக்கும்போது தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம்
போட்டு அனைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல
ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் . காரணம் வெந்த புண்ணிற்கு
குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர்
அவரின் உயிரை எடுத்து விடலாம் |