சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » மருத்துவ குறிப்புகள் | [ Add new entry ] |
உணவில் மஞ்சளின் பங்கு பற்றி அறியாதவர் சிறந்த சமையல் வித்தைக்காரராக இருக்க முடியாது.அத்தகைய மஞ்சளை நமது உணவில் ஏன் சேர்த்துக் கொள்கிறோம்? அதன் மூலம் என்ன பயன் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறதா? சமையலில் சாம்பார் முதல் உடலுக்கு நன்மை பயக்கும் ஆயுர்வேத மருத்துவம் வரை அனைத்திலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. மேலும் பெண்கள் தங்களின் சருமத்தை பொலிவாக வைத்திருக்க மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மஞ்சளை நாம் உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் ஆரோக்கியத்துக்கு நல்லதாக அமைகிறது. இயற்கை நிவாரணி.. மஞ்சள் ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது. உடல் எடைக் குறைய நம் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமான கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் மஞ்சள் முக்கியப் பங்கை வகிக்கிறது. அதனால் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது உடல் எடைக்குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு கணையப் புற்றுநோயிலிருந்து லூக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வரை பல மருத்துவச் சிகிச்சைகளுக்கு மஞ்சள் பயன்படுகிறது. புற்றுநோயைத் தூண்டிவிடும் புதிய இரத்த அணுக்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்துகிறது. நுரையீரலுக்கு நல்லது நுரையீரல் சிறப்பாகச் செயல்பட இயற்கையிலேயே மஞ்சள் உதவுகிறது. நுரையீரலுக்குத் தேவையில்லாமல் வரும் நச்சுப் பொருட்களை மஞ்சள் கட்டுப்படுத்துகிறது. ஆன்டி-ஆக்ஸிடண்ட் மஞ்சளின் துணை உற்பத்திப் பொருளான க்ளூட்டோதியோன் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆகும். இது நம் ஆயுளைக் கூட்டுவதற்கு உதவும். அல்சைமர் நோய்க்கு... நினைவாற்றலைக் குறைக்கச் செய்யும் அல்சைமர் நோயின் தாக்கத்தை மஞ்சள் வெகுவாகக் குறைக்கிறது. வலி நிவாரணி மஞ்சள் ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். பல்வேறு வாத நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பல அலர்ஜிகளுக்கு எதிராகப் போராடும் மஞ்சள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. இரத்தத்திற்கு நல்லது இரத்தம் உறைதலை வெகுவாகக் குறைக்கும் மஞ்சள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. செரிமானத்திற்கு நல்லது உடல் செரிமானத்திற்கு மஞ்சள் ஒரு அருமையான மருந்தாகும். எனவே மஞ்சளை நம் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். | |
Views: 743 | |
Total comments: 0 | |