சிறுநீரகத்தில் கற்கள் உள்ளனவா ! ?
நாம் தேவைக்கு குறைவாக தண்ணீர் அருந்தும் பொழுதோ அல்லது நீரிழப்பு அதிகமாக இருக்கும் சமயங்களிலோ உடலில் தேவையான நீர் இருப்பதில்லை. அந்த சமயங்களில் நீரில் கரையக் கூடிய பொருட்கள் நீர் பற்றாக் குறையால் கரையாமல் படிகங்களாக உருவாகின்றன. சிறுநீரில் உள்ள பொருட்கள் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. சிறுநீரகத்தில் சிட்ரிக் உப்பு, மெக்னீசியம், பைரோபாஸ்பேட் ஆகியவை குறைவதால் கற்கள் உருவாகின்றன. ஒரு சிலருக்கு பரம்பரை நோய்களாக இருக்கும். சிறுநீரகம் மற்றும் குழாய்களில் நோய்க்கிருகளின் தாக்கம் ஏற்படுவதாலும் கற்கள் உண்டாகும். முதுகில் இருந்து வலி ஏற்பட்டு இனப்பெருக்க உறுப்புகள் வரை நீடிக்கலாம். மாறாக வயிற்றின் அடிப்பாகத்திலும் வலி உண்டாகலாம். கற்களின் தன்மை, எண்ணிக்கை, உருவாகியுள்ள இடத்தை பொறுத்து மிதமானது முதல் கடுமையான வலி ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் வெளியேறலாம். நோய்க் கிருமிகளின் தாக்கம் இருப்பின் ஜூரமும் உண்டாகலாம்.
இவ்வாறு சில அறிகுறிகளை வைத்து சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதை கண்டறியலாம். |
Category: மருத்துவ குறிப்புகள் | Added by: m_linoj (2013-08-20)
|
Views: 985
| Rating: 5.0/1 |