சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!
விட்டமின்-சி
அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும்
சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.
சி
ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும்
எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து
கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும்
கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மேலும்
வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால்
உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
என்றாலும்
விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும்
பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை
என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே
மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை
தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது. |
Category: மருத்துவ குறிப்புகள் | Added by: m_linoj (2009-08-05)
|
Views: 5305 |
| Rating: 2.0/1 |