மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து
அமெரிக்காவில்
உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேற்ந்த ஆயாளர்கள்
குழு இந்திய விஞ்ஞானி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் மலேரியா நோயைத்
தடுக்கும் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
பரிசோதனையில் இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மலேரியா
நோய் உலகம் முழுதும் 50 கோடி மக்களை தாக்கி வருகிறது. ஆண்டுதோறும் சுமார்
10 லட்சம் பேர் உலகம் முழுதும் மலேரியாக் காய்ச்சலுக்கு உயிரிழந்து
வருகின்றனர்னர்.
குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டு குழந்தைகள் இந்த
நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். ஆசியாவிலும் இந்த நோயின் தாக்கம்
அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
முக்கியத்துவம்
வாய்ந்த இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய நிர்பாய் குமார், இது குறித்து
கூறுகையில், "மலேரியா வைரஸ் பரவலைத் தடுக்கும் இந்த புதிய தடுப்பு மருந்தை
எலிகளுக்குள் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டபோது, கிடைத்த முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்ததால் அதனை மனித உடலுக்கும் மாற்ற முடியும் என்ற
நம்பிக்கை பிறந்துள்ளது" என்றார்.
அதாவது இந்த ஆய்வாளர்கள்
மலேரியல் புரோட்டீனை தயாரித்து அதனை எலிகள் மற்றும் கென்யாவில் உள்ள ஆலிவ்
குரங்கினங்கள் ஆகியவற்றை வைத்து பரிசோதனை செய்தனர். அப்போது கொசுவின்
உடலில் வளரும், மலேரியா உருவாக்கும் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியின்
வளர்ச்சியை இந்த தடுப்பு மருந்து சிறப்பாக முடக்கியது தெரிய வந்ததாக இந்த
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொசுவில் உருவாகும் இந்த
ஒட்டுண்ணி பல்கிப் பெருகுவதன் மூலம் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது.
தற்போது இந்த மலேரியா தடுப்பு புரோட்டீன் இந்த வளர்ச்சியை தடுத்து
விடுகிறது.
இந்த புரோட்டீன் வாக்சின் ஒரே ஒரு டோஸ்
கொடுக்கப்பட்டபோது 93 விழுக்காடு எதிர்ப்பு சக்தி உருவானதாக கூறப்பட்டுள்ள
இந்த ஆய்வில் நாளைடைவில் மலேரியா எதிர்ப்பு சக்தி 98 விழுகாடாக
அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் மலேரியா
ஒழிப்பு முயற்சியில் இது ஒரு தொடக்க கட்டமே என்று கூறியுள்ள ஆய்வாளர்கள்,
மேலும் பல சீரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் முன்னேற்றம் ஏற்பட்டால்
மலேரியா நோயையே அகற்றி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
Category: மருத்துவ குறிப்புகள் | Added by: m_linoj (2009-08-02)
|
Views: 1426
| Rating: 0.0/0 |