சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது
நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே
தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து
நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம்
செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.
உணவு வேளையில் நீங்கள் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட
பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட
இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.
காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல் துலக்க வேண்டும். |