தேவையானப் பொருட்கள்:
பீர்க்கங்காய் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 5 இலை
கடுகு – தாளிக்க
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
1.பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காய், தக்காளி மற்றும் மஞ்சள் தூளுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
3.பீர்க்கங்காய் மற்றும் தக்காளி வெந்ததும் எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து
பின்னர் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்கவும்.
5.அதன் பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றவும்.
6.வதங்கிய வெங்காயத்துடன் இந்த கலவையை சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
7.சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம். |