சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கணினி » கணணி செய்திகள் | [ Add new entry ] |
ஐபோனை பின்னுக்குத்தள்ளிய ஆன்டிராய்டின் வெற்றி கதை!
ஸ்மார்ட்போன் என்றாலே இன்று எல்லோருக்கும் முதலில் தோன்றுவது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் தான். அந்த அளவுக்கு ஆன்டிராய்ட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஆன்டிராய்ட் உலகில் உள்ள 80% ஸ்மார்ட்போன்களில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ்யை 13% ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆப்பிள் 16% ஸ்மார்ட்போன்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோனை ஆன்டிராய்ட் பின்னுக்குத்தள்ளி எப்படி மக்களிடத்தில் இவ்வளவு பிரபலமாக உள்ளது, ஆன்டிராய்டின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கீழே பார்ப்போம். ஆன்டி ரூபின் மற்றும் இன்னும் சில மொபைல் டெக்கனாலஜி வல்லுனர்களால் ஆன்டிராய்ட் ஒரு தனி கம்பெனியாக 2003ல் தொடங்கியது. 2005ல் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டை வாங்கியது. ஆன்டி ரூபின் மற்றும் அவருடன் கம்பெனியை தொடங்கியவர்கள் மற்றுவர்களை போல் அமைதியாக இதில் வேலை பார்த்து வந்தனர். 2008ல் கூகுள், டி-மொபைல் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஜி1 என்ற உலகின் முதல் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. 2009ல் நவம்பர் மாதம் மோட்டோரோலா டிராய்ட் என்ற மொபைல் ஆன்டிராய்ட் வெர்ஷன் 2.0 உடன் வெளிவந்தது. அன்று முதல் ஆன்டிராய்டின் வளர்ச்சி தொடங்கியது. மோட்டோரோலா டிராய்ட் மார்கெட்டிங் தந்திரம் ஆப்பிள் ஐபோனை பின்னுக்குத்தள்ள தொடங்கியது. கூகுள் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் ஆன கூகுள் நெக்சஸ் ஒன் மொபைலை ஜனவரி மாதம் 2010ல் வெளியிட்டது. எதிர்பாராத விதமாக கூகுள் நெக்சஸ் ஒன் மக்களிடத்தில் அதிகம் பிரபலம் ஆகவில்லை என்பதால் ஜூலை மாதம் 2010ல் இதன் தயாரிப்பை கூகுள் நிறுத்தியது.
ஆனால் 2010ஆம் ஆன்டிராய்டிற்க்கு வெற்றி ஆண்டாகவே அமைந்தது, காரணம் சாம்சங் நிறுவனம் தனது முதல் கேலக்ஸி எஸ் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை 2010ல் தான் வெளியிட்டது. ஆன்டிராய்டின் அசூர வளர்ச்சி இங்கு தான் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை சாம்சங் நிறவனம் கேலக்ஸி மாடல்களில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. ஜுன் மாதம் 2010ல் ஹச்டிசி நிறுவனமும் தனது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போன் ஆப்பிளின் ஐபோனுக்கு நிகராக கருதப்பட்டது. 2010ல் ஆன்டிராய்டின் மார்க்கெட் ஷேரும் அதிகம் ஆனது. 2010ல் கூகுள் சாம்சங்குடன் இணைந்து நெக்சஸ் எஸ் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதுவே ஆன்டிராய்ட் ஜிஞ்சர் பிரட் ஓஎஸ் உடன் வந்த முதல் ஸ்மார்ட்போன் ஆகும். 2011ல் கூகுள் நிறுவனம் ஹனிகோம்ப் என்ற முதல்ஆன்டிராய்ட்டேப்லெட்டை வெளியிட்டது எதிராபாராத விதமாக இது சரியாக போகவில்லை. பிளாக்பெரியின் US மார்கெட்ஷேரைஆன்டிராய்ட்2010ல்பின்னுக்குத்தள்ளியது நவம்பர் மாதம் 2011ல் ஆன்டிராய்டின் அடுத்த ஓஎஸ் ஆன ஐஸ்கிரீம் சான்ட்விச் வெளிவந்தது. இது ஆன்டிராய்டிற்க்கு புது பொலிவை தந்தது. நவம்பர் மாதம் 2011ல் தான் சாம்சங் நிறுவனம் ஆப்பிளை தாக்கும் வகையில் மார்கெட்டிங்கை தொடங்கியது. 2012ல் சாம்சங் கேலக்ஸி எஸ் 3 வெளிவந்த பிறகுதான் சாம்சங் மற்றும் ஆன்டிராய்டின் உண்மையான வளர்ச்சி உலகுக்கு தெரிந்தது. 2012ல் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் என்ற புதிய ஓஎஸ்யை வெளியிட்டது. இன்று உலகில் 80% ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஆன்டிராய்ட் மேலும் பிரபலம் ஆவதற்க்கு இன்னொரு காரணம் இது கூகுள் சேவைகளுடன் வருகிறது மேலும் இது இலவசமாக கிடைக்கும் ஓஎஸ் ஆகும். | |
Views: 903 | |
Total comments: 0 | |