linoj.do.am

சேவைகள்
CATEGORIES
கணணி செய்திகள்
கணினி குறுக்கு வழிகள்
மென்பொருள் பதிவிறக்கம்
மென்புத்தகங்கள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » கணினி » கணணி செய்திகள் [ Add new entry ]

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. "நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.

ரீஸ்டோரஷன் என்றால் என்ன?

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.

இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).

அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு.

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்?

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.

விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.

டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.

மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.

விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.

இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.

நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.

நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).

இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.

இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது.

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.

அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம்.

Category: கணணி செய்திகள் | Added by: (2010-04-04) | Author: இணையத் தமிழ் உலகம்
Views: 1735 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]