ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு
வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க
துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல்
ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய
ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என
ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே
இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன்
ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்
வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை
வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ-
மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ்
ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி
புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான்.
இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்டோரேஜ் கெபாசிட்டி தான்
தேவைப்படுமாம்.
நன்றி : தினமலர் |