மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்
சர்வதேச
சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன
லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த
மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில்
பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை
மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர்.
மடிக்கணினி
விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம்,
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன்
மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டில் விற்பனை
செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என
ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
Category: கணணி செய்திகள் | Added by: m_linoj (2009-08-03)
|
Views: 1173
| Rating: 5.0/1 |