இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி
இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங்
போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம்
கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில
வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக
கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.
இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில் பேசிக்கொள்கிறார்கள்
என்று பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தால் இந்த
வெப்சைட்டுக்கு அவசியம் செல்ல வேண்டும்.
www.noslang.com/index.php
இங்குள்ள சர்ச் பாக்சில் உங்களுக்கு புரியாத அந்த சங்கேத மொழியை
கொடுத்தால் அதற்குரிய அர்த்தம் விளக்கப்படுகிறது. குறிப்பாக, lol என்ற
வார்த்தைக்கு, laughing out loud என்பது அர்த்தம் என்று தெரிய வரும். இதே
போல், 10 - thank you, 10x - thanks, 2b - to be, b4n - bye for now, cb -
come back, coz - because
உள்ளிட்ட வார்த்தைகள் இன்டர்நெட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சுருக்க
மொழி. இது போன்ற ஏராளமான வார்த்தைகளை இந்த வெப்சைட் தொகுத்துள்ளது.
உங்களுக்கு இதே போன்ற வார்த்தைகள் தெரிந்தால் கூட நீங்களும் இந்த வெப்சைட்டுக்கு வழங்க தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் வார்த்தைகள் எவை என்பதை
தனிப்பக்கத்தில் காணலாம். இன்டர்நெட்டுக்கு என தனி வட்டார மொழி உருவாகி
விட்டது என்பதை இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
|
Category: கணணி செய்திகள் | Added by: m_linoj (2009-07-08)
|
Views: 1434
| Rating: 0.0/0 |