ஒவ்வொரு
நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் கடந்த
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த கூகிள் துலக்கி மாநாட்டில்
(Developer Conference)ல் வரப்போகும் HTML 5 மற்றும் அதன் நன்மைகளையும்
விவரித்தனர், அது மட்டும் இல்லாமல் கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான
Google Wave (கூகிள் அலை) பற்றியும் விவரித்தனர்.
HTML 5வை இணைய உலாவிகள் தயாரிக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும்
வரப்போகும் காலகட்டங்களில் அமுல் படுத்த உள்ளனர். இதனால் எந்த ஒரு
சொருகியும்(plugins) இல்லாமல் 3D படங்களை பார்க்கவும், விளையாட்டுக்களை
விளையாடவும் செய்யலாம்.
What is Google Wave ?
Google Wave is a new communication and collaboration platform based
on hosted XML documents (called waves) supporting concurrent
modifications and low-latency updates. Google Wave is an HTML 5 app,
built on Google Web Toolkit.
கூகிள் நிறுவனத்தின் புதிய கருத்துப்பறிமாற்ற மேடையான(Platform) கூகிள் அலை(Google Wave) HTML
5 வை உபயோகப்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவர் அரட்டை மற்றும் மின்னஞ்சலை
ஒரே நேரத்தில் கையாளாலம். அது மட்டும் இல்லாமல் அரட்டையின் போது உங்கள்
நண்பர் தட்டச்சில் என்ன வார்த்தைகளை எழுதுகிறாரோ அப்படியே உடனுக்குடன்
இங்கு உங்கள் திரையில் பார்க்கலாம் இதனால் கருத்துப்பறிமாற்றம் அதிவேகம்
அடைகிறது.
கூகிள் அலை (Google Wave) ஒர் இணைய பயன்பாடு, இதில் பயனாளர்கள் கூகிள்
அலையை தொகுக்க முடியும். அது மட்டும் இலல்லாமல் கூகிள் அலை Rich text
எடிட்டர் மற்றும் desktop drag-and-drop போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
கூகிள் Wave திறந்த வெளி தொடர்பு வரைமுறை, இதனால் எந்த ஒரு wave தொடர்புகளும் கூகிள் wave வுடன் தொடர்பு கொள்ளலாம்.
கூகிள் Wave கானொளி.
by - கார்த்திகேயன்
Source: http://www.tamiltech.info/magazine/archives/google-wave-a-new-communication-platform/#more-352 |