காதலன்: இப்படி பயந்து,
பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!
JJJJJ
ஒருத்தி: காதல் பாதை
கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!
JJJJJ
ஒருவர்: என் பொண்ணு
தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!
மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?
ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!
JJJJJ
ஒருத்தி: என்னடி லவ்
வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...!
மற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி
யாருக்காவது அனுப்பச் சொல்லி இருக்கிறார்.
JJJJJ
காதலி: நம் காதலை ஏன்
அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
JJJJJ
காதலன்: ராஜி...என்ன
இன்னிக்கு சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்...?
காதலி: நான் கர்ப்பமாகி இருக்கேன் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான்...
JJJJJ
ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி
அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்?
ஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம். |